முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக திகதி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்தி, தாக்குதல் மேற்கொண்டு, சட்ட…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக திகதி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2015-ஆம் ஆண்டில் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்தி, தாக்குதல் மேற்கொண்டு, சட்டவிரோதமாக தடுத்துவைத்த குற்றத்திற்காக ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. உத்தரவு

குறித்த உத்தரவுதண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஹிருணிகா பிரேமச்சந்திரா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்பிரகாரம், தொடர்புடைய மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.