திருச்சியில் வசிக்கும் இலங்கை ஏதிலியான தனுஜா என்ற வீராங்கனை, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை (Palk Strait) கடல் நீச்சல் மூலம் கடக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூலம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். கடவுச்சீட்டு இல்லாததால் இலங்கை ஏதிலியான தனுஜா இந்த ச…

திருச்சியில் வசிக்கும் இலங்கை ஏதிலியான தனுஜா என்ற வீராங்கனை, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை (Palk Strait) கடல் நீச்சல் மூலம் கடக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூலம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். கடவுச்சீட்டு இல்லாததால் இலங்கை ஏதிலியான தனுஜா இந்த சட்டப்பூர்வ அணுகலை மேற்கொண்டுள்ளார்.

இன் நிலையில் பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்வதற்கு இலங்கை ஏதிலி அனுமதி கோரிய மனு குறித்து, மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.இலங்கை ஏதிலி தனுஜா பாக்கு நீரிணையை நீந்தி கடக்க திருச்சியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான , இலங்கை ஏதிலி  தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது மனுவில் "இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக நான் இந்தியாவுக்குக் அழைத்து வரப்பட்டேன். தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் முகாமற்ற இலங்கை ஏதிலியாக பதிவு செய்யப்பட்டு வசித்து வருகிறேன்.

நான் ஒரு நீச்சல் வீராங்கனை என்பதால், தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

இதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், என்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்ற காரணத்தைக் கூறி அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, எனது நீச்சல் பயணத்துக்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.

இலங்க்கை ஏதிலியின் மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.