இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியமும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையமும் இணைந்து, இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை வலுப்படுத்தவும் ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற…

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியமும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையமும் இணைந்து, இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை வலுப்படுத்தவும் ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று (1) கையெழுத்திட்டன.

ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையத்தின் கலாநிதி ஜூலியா பெல்லிங்ஹவுசென் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வணிக உறவுகள்

இதன்போது கருத்து தெரிவித்த ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையத்தின் கலாநிதி ஜூலியா பெல்லிங்ஹவுசென், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிலையான வணிக உறவுகளை ஏற்படுத்துவதற்கும் நீண்டகால உறவுகளை உருவாக்குவது அவசியமாகும்.

அத்துடன் தொழில்நுட்ப நிபுணத்துவம், திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடனான வலுவான தொடர்புகள் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து இலங்கை ஏற்றுமதி வாரியத்துடன் இணைந்து ஆதரவளிக்க ஜேர்மனி இறக்குமதி ஊக்குவிப்பு மையம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இந்த இருதரப்பு உறவுகளின் மூலம் குறிப்பாக, இயற்கை மூலப்பொருள் துறையில் உள்ள உள்நாட்டு நிறுவனங்களின் திறன், மேம்பாட்டு சந்தை விபரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பது போன்ற பல நன்மைகள் ஏற்கனவே பெற்று கொள்வதன் மூலம் நிலையான வணிக உறவுகளை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு திட்டங்கள் மூலம் ஏற்றுமதி சார்ந்த பெண் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் உலகளாவிய சந்தைகளில் தடம் பதிப்பதற்கான நல்வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.