இலங்கை நிர்வாக சேவைக்கு 150 புதிய அதிகாரிகளை விரைவில் உள்வாங்குவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைக்கு இலங்கை நிர்வாக சேவையில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணி…

இலங்கை நிர்வாக சேவைக்கு 150 புதிய அதிகாரிகளை விரைவில் உள்வாங்குவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைக்கு இலங்கை நிர்வாக சேவையில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் உள்ளன. அதன் காரணமாக அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்கள் உள்ளிட்ட அலுவலக செயற்பாடுகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

150 அதிகாரிகள் விரைவில் நியமனம் அதன் காரணமாக குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில், இந்த நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சையொன்றை விரைவாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், தற்போதைக்கு இலங்கை நிர்வாக சேவையில் வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு உரிய நியமனங்கள் செய்யப்படவுள்ளன.

இலங்கை நிர்வாக சேவையில் உதவிச் செயலாளர் பதவிக்கு 150 புதிய அதிகாரிகளை விரைவில் நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்றார்.