இலங்கை வரலாற்றில் சிறைக் கைதிகளின் தாக்குதலின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது. நேற்றும் (05) இன்றும் (06) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிறைக்கைதி…

இலங்கை வரலாற்றில் சிறைக் கைதிகளின் தாக்குதலின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது.

நேற்றும் (05) இன்றும் (06) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிறைக்கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை உத்தியோத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள்

மோதலின் காரணமாக இதுவரை கொல்லப்பட்ட சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 7 ஆகும். அத்துடன் பத்தொன்பது கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு மேலதிகமாக 23 சிறை அதிகாரிகளும் 54 கைதிகளும் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறைச்சாலை வட்டாரங்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மோதலில் படுகாயமடைந்த 18 பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.