பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து 200 பொலிஸ் அதிகாரிகள் மாத சம்பளம் பெற்று வந்தமை அம்பலமாகி உள்ளது. இது குறித்து, அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இலங்கையில் பாதாள உலகச் செயற்பாடுகள…

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து 200 பொலிஸ் அதிகாரிகள் மாத சம்பளம் பெற்று வந்தமை அம்பலமாகி உள்ளது.

இது குறித்து, அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இலங்கையில் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சுமார் 2,000 பேர் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள்மேலும் பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துபவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் சுமார் 1,000 பொலிஸ் அதிகாரிகள் அண்மைக்காலத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய ஆறு பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுத் தகவல்அது தொடர்பான தகவல்கள் கடந்த வாரம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களுடனும், பல்வேறு கடத்தல்காரர்களுடனும் இணைந்து செயற்படும் பொலிஸ் அதிகாரிகளைக் கண்டறியப் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், கற்பிட்டி உள்ளிட்ட சில பொலிஸ் நிலையங்களில் பணி புரிந்த அனைத்து அதிகாரிகளும் அண்மைய நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.