இலங்கையில் Headphones அல்லது இயர்போன்களை அணிந்துகொண்டு இசையைக் கேட்டவாறு வீதிகளில் நடப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சாதனங்களைப் பயன்படுத்தி வீதிகளில் நடப்பது பாதசாரிகளை விபத்துகளுக்கு உள்ளாக்கும் ஆபத்து உள்ளதாக இலங்கை போக…
இலங்கையில் Headphones அல்லது இயர்போன்களை அணிந்துகொண்டு இசையைக் கேட்டவாறு வீதிகளில் நடப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சாதனங்களைப் பயன்படுத்தி வீதிகளில் நடப்பது பாதசாரிகளை விபத்துகளுக்கு உள்ளாக்கும் ஆபத்து உள்ளதாக இலங்கை போக்குவரத்து பொலிஸ் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கைதற்போது அவ்வாறு செல்பவர்களுக்கு எச்சரிக்கைகள் மட்டுமே விடுக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீதி விபத்துக்களால் இலங்கையில் நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கவனக்குறைவு, போக்குவரத்து விதிகளை மீறுதல், அதிக வேகம் மற்றும் வாகனங்களின் முறையற்ற பராமரிப்பு போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாகும்.
போக்குவரத்து விதிகள்நாட்டில் விபத்துகளைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 3 கிலோமீட்டர் தூரம் வரை வேகத்தைக் கண்டறியக்கூடிய அதிநவீன வேகமானிகளை பொலிஸார் தற்போது பயன்படுத்துகின்றனர்.சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது யாருடைய அந்தஸ்தையும் பார்க்கப்போவதில்லை. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் நீதிமன்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்படும். சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

