டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதைத் தடுக்க வெறும் பிரச்சாரங்களுக்குப் பதில் விரைவான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜப…

டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதைத் தடுக்க வெறும் பிரச்சாரங்களுக்குப் பதில் விரைவான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது என்பதை சுகாதார அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டில் 50,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஆனால், ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி உயர் மட்டச் சுத்திகரிப்புப் பணி இப்போதுதான் நடைபெறுகிறது.டெங்கு ஒழிப்புத் திட்டம்தற்போதைக்கு ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள்ளேயே டெங்கு ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த நேர்ந்துள்ளது என்றால் அதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைத் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலைமையில் சுகாதார அமைச்சர் வெறும் பிரச்சாரங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், தற்போதைய நெருக்கடியை நிர்வகிப்பதில் சுகாதார அமைச்சர் என்ற முறையில் மேலும் முனைப்புடன் தலையிட வேண்டும். டெங்குவைத் தடுப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் பாராட்டப்பட வேண்டும். ஆனால், டெங்கு நோய்ப் பரவல் தேசிய ரீதியான ஒரு பெருந்தொற்றாக மாறுவதற்கு முன்பே அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. டெங்கு தடுப்பு என்பது முக்கிய அரசாங்க நிறுவனங்களின் அடையாளப் பணியாக இருக்கக்கூடாது.சுகாதார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்ஒவ்வொரு மாவட்டம், உள்ளூராட்சி மற்றும் சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு நீடித்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை விடுத்து, நாட்டின் சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் சுகாதார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை டெங்கு பெருந்தொற்றை எதிர்கொண்டுள்ள இக்காலத்தில், சுகாதார அமைச்சர் சுகாதாரப் பணியாளர்களின் கருத்துக்களைக் கேட்டு, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணியாளர் திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டும்.சுகாதாரத் துறை முழுவதும் நிலவும் கடுமையான பற்றாக்குறைகளை நிரப்புவதற்குத் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு முன்னால் மக்களின் நலனே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அரசாங்கம் வெறும் பிரச்சாரங்களைத் தாண்டி, ஒரு விரிவான தேசிய டெங்கு தடுப்பு உத்தியை நடைமுறைப்படுத்த வேண்டும். செயல்திறன் மிக்க தலைமைத்துவம் என்பதை விட தற்போதைக்கு செயல்திறன் மிக்க நடவடிக்கைகளே அத்தியாவசியமாகும் என்றும் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.