மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகள் பேரியல் பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவியுள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பபஜார்ஜியோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்க…

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகள் பேரியல் பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவியுள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பபஜார்ஜியோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் இலங்கைக்கான பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, நேற்று பிற்பகல் (30) இலங்கை மத்திய வங்கியில் ஒரு விசேட செய்தியாளர் சந்திப்பை தூதுக்குழுவினர் நடத்தியிருந்தனர்.

அதன்போதே சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நீடிக்கப்பட்ட நிதி வசதிகளின் 7வது மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கும்.நாட்டின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, சீர்திருத்தங்களை மறைமுகமாகப் பராமரிப்பது அவசியமாகும்.

வெளிப்புற அதிர்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைக் கவனத்திற் கொண்டு, பொருளாதார சீர்திருத்தங்களைத் தக்கவைப்பதில் கவனம் செலுத்துவதே இலங்கையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

சீர்திருத்தச் செயல்முறைக்குத் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மிக முக்கியமானது. மத்திய கிழக்கில் நிலவிய மோதல்கள் தொடர்பாக இலங்கை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமானவை என்றும் இவான் பபஜார்ஜியோ தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.