கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல…
கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு மத்தியிலும், இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடல்வழிப் போக்குவரத்து சவால்களை சமாளிப்பதற்காக ஏற்றுமதியாளர்கள் மாற்று போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தியமை இந்த வருமான உயர்வுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தேங்காய் மற்றும் இளநீர் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக வானூர்தி சரக்கு சேவைகளைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
இதன் மூலம் கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்து, ஏற்றுமதி அளவைச் சீராகப் பேண முடிந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கப்பல் போக்குவரத்தில் நிலவும் நெருக்கடிகளுக்கு மாற்று துரித போக்குவரத்து தீர்வுகளை நடைமுறைப்படுத்தியமை, இலங்கையின் தெங்கு ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

