இங்கிலாந்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநலப் பாதிப்புகள் ‘நெருக்கடி’ நிலையை எட்டியுள்ளதாக சிறுவர் ஆணையர் டேம் ரேச்சல் டி சௌசா தனது வருடாந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார். தேசிய சுகாதார சேவையின் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம், மனநலச் சிகிச்சைக்காகப் பரிந்த…
இங்கிலாந்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநலப் பாதிப்புகள் ‘நெருக்கடி’ நிலையை எட்டியுள்ளதாக சிறுவர் ஆணையர் டேம் ரேச்சல் டி சௌசா தனது வருடாந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
தேசிய சுகாதார சேவையின் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம், மனநலச் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் இளம் வயதினரின் எண்ணிக்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 இலட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஆட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஆட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சிறுவர்களுக்கான மருத்துவப் பரிந்துரைகள், வெறும் ஓராண்டிற்குள் 47 சதவீதம் என்ற உயர்வைச் சந்தித்துள்ளன.
மார்ச் 2025 வரையிலான 12 மாத காலப்பகுதியில் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இங்கிலாந்தில் உள்ள தோராயமாக 10 சிறுவர்களில் ஒருவர் மனநலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.
இது 2018-19 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்பதுடன் சிறுவர்களுக்கான மனநல சேவைப் பரிந்துரைகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரே வருடத்தில் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

