(நா.தனுஜா) தமிழ்த்தேசியப் பேரவையினால் நியமிக்கப்பட்ட ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டத்தில…
(நா.தனுஜா) தமிழ்த்தேசியப் பேரவையினால் நியமிக்கப்பட்ட ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமென அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 33 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளரகக் கொண்ட 33 பேரடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை யாழ்ப்பாணத்தில் கூடிஇ புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிப்பதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை எடுத்துவரும் முயற்சிகள் மற்றும் அதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பி.ப 7.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் 33 பேரைக் கொண்ட வழிநடத்தல் குழு கூடவுள்ளது. இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதவர்கள் நிகழ்நிலை முறைமை ஊடாகப் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

