‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (03) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் ரூ…

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (03) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் ரூ.3,108,805,000 அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக ரூ.380,695,000 அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தகுதியுடைய பயனாளர்கள் இன்று (03) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை வங்கிகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.