இன்றுடன் பணி ஓய்வு பெறும் ஹட்டன் கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த திரு.டி.நாகராஜ், 38 வருட அரசுப் பணிச…

இன்றுடன் பணி ஓய்வு பெறும் ஹட்டன் கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-மஸ்கெலியா நிருபர்-

ஹட்டன் கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த திரு.டி.நாகராஜ், 38 வருட அரசுப் பணிச் சேவையை நிறைவு செய்து இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றார்.

கல்வித்துறையில் நீண்டகால அனுபவம் மிக்கவராக திகழும் இவர், ஒரு நல்ல ஆசிரியராகவும், பாடசாலையும் சமூகமும் விரும்பும் சிறந்த அதிபராகவும், பின்னர் அனுபவத்தோடு வழிகாட்டும் உதவி கல்விப் பணிப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆசிரியர்களின் வழிகாட்டல், பாடசாலைகளின் நிர்வாக முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் கல்வி வளர்ச்சி ஆகிய துறைகளில் அவரது பாரிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

அவரது 38 ஆண்டுகால சேவை, மலையகக் கல்விப்புலத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றதுடன், பலராலும் மதிக்கப்படும் கல்வி ஆளுமையாக அவரை உயர்த்தியுள்ளது.

இன்றுடன் பணி ஓய்வு பெறும் திரு.டி.நாகராஜ் அவர்களுக்கு கல்வித்துறையினரும், மாணவர்களும், சமூகத்தினரும் தங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.