பசறை நகரில் நடைபெற்ற பெரஹரா ஊர்வலத்தைக் காண்பதற்காக நடைபாதையில் அமர்ந்திருந்த மக்கள் மீது, கடை உரிமையாளர் ஒருவர் தண்ணீரை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரஹரா ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக அப்பகுதிக்கு வந்த மக்கள், கடை ஒன்றிற்கு முன்பாக உள்ள நடைபாதைய…

பசறை நகரில் நடைபெற்ற பெரஹரா ஊர்வலத்தைக் காண்பதற்காக நடைபாதையில் அமர்ந்திருந்த மக்கள் மீது, கடை உரிமையாளர் ஒருவர் தண்ணீரை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரஹரா ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக அப்பகுதிக்கு வந்த மக்கள், கடை ஒன்றிற்கு முன்பாக உள்ள நடைபாதையில் அமர்ந்திருந்தனர். தனது கடைக்கு முன்னால் மக்கள் அமர்ந்திருப்பதைத் தடுக்கவும், அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காகவும் கடை உரிமையாளர் நடைபாதையில் தண்ணீரை ஊற்றியுள்ளார்.

இந்தச் செயல் அங்கு நின்றிருந்த மக்களிடையே கடும் அதிருப்தியையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. ஊர்வலத்தை ரசிப்பதற்காக வந்தவர்கள், கடை உரிமையாளரின் இந்தச் செயலால் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.