மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (1) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (1) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 107 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 52 வயதுடைய பிரான்சிஸ்கு பகுதியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,561,100 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மொரட்டுவை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.