எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோணி" என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட பெண் ஒருவர் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் எப்பாவல, பத்கொலவெட்டிய பகுதியைச் சேர்ந்த…

எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோணி" என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட பெண் ஒருவர் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் எப்பாவல, பத்கொலவெட்டிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.போதைப்பொருள் வியாபாரம் எப்பாவல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பெண்ணின் இல்லத்தை அதிரடியாகச் சோதனையிட்ட போதே அவரிடமிருந்து 2.450 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இப்பெண்ணுக்கு, இதற்கு முன்னரும் சட்டவிரோத மதுபானக் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக 10 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பிரதேசத்தின் முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தராக இவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் நேற்று சனிக்கிழமை (04) தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபரை வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.