இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று வெள்ளிக்கிழமை (03) தற்காலிகமாகக் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.கஹவத்த புராண விகாரையின் வருடாந்த மிஹிந்து மகா பெரஹரா ஊர்வலம் இன்று இரவு வீதி உலா வரவிருப்பதன் காரணமாகவே இந்த போக்குவரத்து கட்டுப்பா…
இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று வெள்ளிக்கிழமை (03) தற்காலிகமாகக் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.கஹவத்த புராண விகாரையின் வருடாந்த மிஹிந்து மகா பெரஹரா ஊர்வலம் இன்று இரவு வீதி உலா வரவிருப்பதன் காரணமாகவே இந்த போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இந்த பெரஹரா ஊர்வலம் இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதி வழியாகச் சென்று, லிஹினியா சந்தியிலிருந்து திரும்பி, கொட்டகெத்தன வீதி ஊடாக மீண்டும் கஹவத்த புராண விகாரையை சென்றடையவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலகுரக வாகனங்கள் மாத்திரம் வீதியின் ஒரு பத்தியினூடாக பயணிக்க அனுமதிக்கப்படும் அதேவேளை, கனரக வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள், கஹவத்த யாயின்ன சந்தியிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி, மனந்தொல, நிவித்திகல மற்றும் திரிவானாகெட்டிய ஊடாக இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியை அடைய முடியும்.
இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள், பெல்மதுளை, பலங்கொடை மற்றும் வெலிகெபொல ஊடாக பல்லேபெத்த வீதியைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைய முடியும்.
மற்றொரு மாற்று வழியாக, கஹவத்த கடிகாரக் கோபுர வட்டாரத்திலிருந்து இடதுபுறமாக உள்ள ஓபநாயக்க வீதி ஊடாக ஓபநாயக்கவை அடைந்து, பலங்கொடை மற்றும் பல்லேபெத்த ஊடாக எம்பிலிபிட்டிய திசையை நோக்கி பயணிக்க முடியும்.
எனவே, குறிப்பிட்ட இந்த நேரப்பகுதியில் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், மாற்று வழிகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

