இலங்கையின் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ள துணிகரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இந்த கொள்ளைச் சம்பவத்த…

இலங்கையின் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ள துணிகரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு சிசிடிவி (CCTV) கேமராவில் திருடனின் முழுமையான செயல்பாடுகளும் மிகவும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எவ்வித அச்சமுமின்றி உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரத்தினபுரி போலிசாரினால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தின் அளவு மற்றும் சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள சந்தேகநபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். சிசிடிவி பதிவுகளின் துணையோடு சந்தேகநபரின் அடையாளங்களை உறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் வேளையில், பொதுமக்கள் இவர் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.