"இவர்கள் செய்வது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைதான். இது அவர்கள் வழமையாகச் செய்யும் ஒன்றுதான்" என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்கட்சி அரசியல் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் அவர் குறி…
"இவர்கள் செய்வது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைதான். இது அவர்கள் வழமையாகச் செய்யும் ஒன்றுதான்" என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்க்கட்சி அரசியல் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஸில் ராஜபக்ஷ வருகை தரும் நாளை அவரிடமே கேட்க வேண்டும் என்றும், அவர் வரும் நாள் அல்லது செல்லும் நாள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி பஹிரவக்கந்தை ஸ்ரீ மகா போதி விகாரையின் விகாராதிபதி யதிவத்தே தம்மானந்த நாயக்க தேரருக்கு மத்திய மற்றும் அநுபந்த மாகாண உப பிரதம சங்கநாயக்க பதவியின் நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு குறித்த விகாரையில் இடம்பெற்றது. இதன்போது, தம்மானந்த நாயக்க தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசிறியை (விஜினிபத) வழங்கி வைத்தார்.

