அண்மையில் காலமான இயக்குநர் பாக்யராஜ் தனது இரு கண்களையும் தானம் செய்த நிலையில், இருவருக்குப் பார்வை கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி கடந்த திங்கட்கிழமை, மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் இருவருக்கு பாக்யராஜின் கண்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. தன் க…
அண்மையில் காலமான இயக்குநர் பாக்யராஜ் தனது இரு கண்களையும் தானம் செய்த நிலையில், இருவருக்குப் பார்வை கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி கடந்த திங்கட்கிழமை, மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் இருவருக்கு பாக்யராஜின் கண்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன.
தன் கண்களைத் தானம் செய்த பாக்யராஜின் இந்தச் செயல், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யராஜின் கண்களைத் தானமாகப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்திய மருத்துவ விதிகளின்படி வெளியிடப்படவில்லை.
பாக்யராஜ் காலமான பின்னர் மருத்துவக் குழுவினர் பாக்யராஜின் கண்களை மருத்துவமனைக்குக் எடுத்து சென்ற நிலையில் தற்போது அவரது கண்கள் இருவருக்கு பார்வை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

