இயக்குவதற்கான இயந்திர வலு பற்றாக்குறை காரணமாக, களனிவெளி ரயில் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த இரண்டு பிரதான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த விடயத்தை இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சா…

இயக்குவதற்கான இயந்திர வலு பற்றாக்குறை காரணமாக, களனிவெளி ரயில் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த இரண்டு பிரதான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த விடயத்தை இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர ஜயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி இயக்கப்படும் ரயிலும், முற்பகல் 5.55 மணிக்கு அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படும் ரயிலும் இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்களை இயக்குவதற்குத் தேவையான இயந்திர வலு பற்றாக்குறையே இந்தத் தீர்மானத்திற்கு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அண்மைக்காலமாக ரயில்வே திணைக்களத்தில் தொடர்ச்சியாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டு வருவதாகவும், அது தற்போது வழக்கமான நிலைமையாக மாறி வருவதாகவும் இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.