ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றபோது அவரிடம் மாயக்கோல் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை எனவும், வங்குரோத்தடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் - விஜயபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோத…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றபோது அவரிடம் மாயக்கோல் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை எனவும், வங்குரோத்தடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - விஜயபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்று சுமார் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த இரண்டு வருடங்களுக்குள் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள், உரம், எண்ணெய்யை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலையிலேயே அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியும் ஸ்தம்பிதமடைந்திருந்தமையே உண்மை நிலைமையாக இருந்ததாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

