காலி - நாகொட பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து இன்று(28.06.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழப்புஇதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயத…

காலி - நாகொட பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து இன்று(28.06.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஒருவர் உயிரிழப்புஇதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்தில் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்,  விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.