சஹஸ்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின்…
சஹஸ்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 4 அங்குலம் உயரமுடையவர் எனவும் வெள்ளை நிற தலைமுடி மற்றும் கறுப்பு நிற சட்டை மற்றும் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

