யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு சொந்தமான அரச துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில், குறித்த துப்பாக்கியை தேடி பொலிஸ் கடற்படை பிரிவின் ச…
யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு சொந்தமான அரச துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில், குறித்த துப்பாக்கியை தேடி பொலிஸ் கடற்படை பிரிவின் சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், யட்டியந்தோட்டை கராகொட பாலத்திற்கு அடியில் ஆழமான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக கூறப்பட்ட துப்பாக்கி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

