தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்ததை அடுத்து, நேற்ற…

தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்ததை அடுத்து, நேற்று ( 29) சிறுமியின் தந்தை உள்ளிட்ட சிலர் சேர்ந்து, பட்டியலின இளைஞரான பார்த்திபனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பார்த்திபனின் பெற்றோர் நேற்று பொலிஸாருக்கு தகவல் அளித்து முறைப்பாடு அளித்தனர். இந்தச் சூழலில், இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் உட்பட 5 பேரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.