யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சீதாவக்கபுர கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விச…

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சீதாவக்கபுர கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த 26ஆம் திகதி கடமைக்குச் சென்றபோது கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை எடுத்துச் சென்றிருந்த அவர், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.