களனி வழித்தடத்தில் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு தொடருந்து சேவைகள் இன்று (03.07.2026) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. மின் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் அவிசாவெலவுக்கும் இடையிலும், அவிசாவெல்லவிலிருந்து மீண்டும…
களனி வழித்தடத்தில் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு தொடருந்து சேவைகள் இன்று (03.07.2026) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மின் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் அவிசாவெலவுக்கும் இடையிலும், அவிசாவெல்லவிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலும் இயங்கி வந்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. தினசரி பயணம் செய்பவர்களுக்குஇதனால் களனி வழித்தடத்தில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், இன்று முதல் வழக்கமான கால அட்டவணைப்படி சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

