இந்தியாவின் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா, ஜிகினி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொலிஸார் தீவிர விசாரணைஉயிரிழந்தவர் அஷிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2014ஆ…
இந்தியாவின் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா, ஜிகினி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொலிஸார் தீவிர விசாரணைஉயிரிழந்தவர் அஷிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
அஷிதா பணியாற்றிய தொழிற்சாலையில், 28 வயதுடைய நானே சாகேப் என்பவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு வெளியேறி, அவருடன் பாதாளம்மா லே-அவுட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 20ஆம் திகதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த நானே சாகேப், அஷிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதன் பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஜிகினி பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அஷிதாவின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாக உள்ள நானே சாகேப்பை கைது செய்ய தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

