கல்முனையில் திடீர் சோதனை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சோதனை ந…

கல்முனையில் திடீர் சோதனை

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச்சோதனை நடவடிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து இன்று திங்கட்கிழமை   வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.