கம்பஹா- திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(28.6.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள…
கம்பஹா- திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(28.6.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் கைக்குண்டுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

