எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்” தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அ…

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்” தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த இளம் தாயின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்மையில் டெங்கு நோயினால் இளந்தாய் ஒருவர் பிள்ளையினை பிரசவித்த பின்னர் உயிரிழந்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இது தொடர்பில் உயிரிழந்த குடும்பத்தினர் மட்டு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தினார்கள். இதன்போது கருத்து தெரிவித்த குறித்த இளம்பெண்ணின் கணவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

‘தனது மனைவியின் பிரசவத்தின் போது நேர்ந்த மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என மட்டக்களப்பு ஊடக மையத்தில் கண்ணீருடன் கணவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த ஜெயப்பிரியா என்ற பெண்ணின் கணவர் மதுராந்தகன், தனது மனைவிக்கு நேர்ந்த மருத்துவத் தவறுகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையற்ற போக்கு குறித்து ஊடகங்கள் வாயிலாக நீதி கோரியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,