ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையையும் நீதியையும் கொண்டு வருவதற்கான பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக சில தரப்பினர், கர்தினால…

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையையும் நீதியையும் கொண்டு வருவதற்கான பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சமீபகாலமாக சில தரப்பினர், கர்தினாலையும் சில அருட் தந்தையர்களையும் அவமதிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் தீய மற்றும் பொய்யான கருத்துக்களைப் பரப்ப முயற்சி செய்து வருவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கர்தினால் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்காக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே பிரதான பொய்ப் பிரசாரம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம் என்றும், ஆயர்கள் பேரவை இதை வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.