இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நடைபெற்றது. உற்சவத்தின் போது உணவு விற்பனை நிலையங்கள், நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்…

இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நடைபெற்றது. உற்சவத்தின் போது உணவு விற்பனை நிலையங்கள், நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இப்பரிசோதனையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு சொந்தமான ஓர் உணவகம் கண்டறியப்பட்டது.உணவகத்தில் தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்யப்பட்டமை மற்றும் உணவு கையாள்வோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குறைபாடுகள் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சனினால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நெடுந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சனினால் கண்டறியப்பட்ட , உணவக உரிமையாளருக்கு எதிராக ஊா்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 03.07.2026ம் திகதி நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் மூன்று குற்றச் சாட்டுகளுக்கும் 24,000 ரூபாய் தண்டப்பணம் விதித்தார்.

அத்துடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.