கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் சுகாதாரமற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கிய உணவகத்தின் உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று(03.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் சுகாதாரமற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கிய உணவகத்தின் உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று(03.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழா கொண்டாட்டம் இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி மாதம் 26, 27 ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உணவு விற்பனை நிலையங்கள் நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில் இயங்கிய முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த நபர் ஒருவரின் உணவகம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு இதன்படி, உணவகத்தில் தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்தமை, உணவு கையாள்வோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகரால் குறித்த உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நேற்று(03.07.2026) நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, 24,000 ரூபாய் தண்டப்பணமும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5 வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாதகால சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.