டெங்கு நுளம்புகள் கடியெடுக்கும் நேரத்திலும், அவற்றின் செயற்பாட்டிலும் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் டெங்கு நுளம்புகள் சூரிய…

டெங்கு நுளம்புகள் கடியெடுக்கும் நேரத்திலும், அவற்றின் செயற்பாட்டிலும் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் டெங்கு நுளம்புகள் சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதுமே அதிகச் செயற்பாட்டுடன் இருந்தன. இருப்பினும், புதிய ஆய்வுகளின்படி, தற்போது காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த நுளம்புகள் அதிகச் செயற்பாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காலை நேரமானது பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் வெளிப்புறச் சூழலில் அதிகளவில் நடமாடும் நேரமாக இருப்பதால், நுளம்புகள் கடியெடுப்பதற்கான வாய்ப்பும் ஆபத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது. அத்துடன், பாடசாலைச் சூழல்களில் நுளம்புகள் பெருமளவில் காணப்படுவதால், பாடசாலை மாணவர்கள் இந்த ஆபத்திற்கு உள்ளாவதாக மருத்துவர் கன்னங்கர குறிப்பிடுகிறார்.