கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டயகம பிரதேசத்தில் இருந்து இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதி…
கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம பிரதேசத்தில் இருந்து இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600 கிலோகிராம் கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற போது அக்கரப்பத்தனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே கழிவுத் தேயிலை வேன் ஒன்றில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுத் தேயிலையை இவ்வாறு கொண்டு சென்று பல்வேறு நிறம் சேர்த்து (Color-added) கழிவு தேயிலையின் தோற்றத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய வகையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் அவர்கள் மூவரும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

