கிளிநொச்சியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக சிகரெட் மற்…
கிளிநொச்சியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்தது. பொலிஸார் ஆடிய நாடகம் அந்த தகவலையடுத்து கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் விசேட உத்தி ஒன்றை கையாண்ட பொலிஸார், சிறுவன் ஒருவரிடம் பணத்தை கொடுத்து வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி புகைப் பொருட்களை வாங்குமாறு பணித்துள்ளார்.
குறித்த சிறுவன் வர்த்தக நிலையங்களுக்கு சென்று பணத்தைக் கொடுத்து புகைப் பொருட்களை பெற்றுக் கொண்ட போது, அங்கிருந்த பொலிஸார் வர்த்தகர்களை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளின் போது, சிறுவர்களுக்கு புகைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தகர்களுக்கு எதிராகவும், குறித்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

