பேருவளை அல் - ஹூமைசரா தேசிய பாடசாலையில் நேற்று (ஜூலை 5) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, விளையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. பேருவளை, சீனன்கோட்டை, ஜாபிர் எவனியூவை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதுடைய முகம்மத…
பேருவளை அல் - ஹூமைசரா தேசிய பாடசாலையில் நேற்று (ஜூலை 5) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, விளையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பேருவளை, சீனன்கோட்டை, ஜாபிர் எவனியூவை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதுடைய முகம்மத் ஸுல்பிகார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சீனன்கோட்டை, குட்டிமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் திடீர் மறைவு, பேருவளைப் பகுதி மக்கள் மாத்திரமன்றி நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

