பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’வுடன் தொடர்புகள் பேணியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார…
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’வுடன் தொடர்புகள் பேணியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

