ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 6000 நாட்கள கடந்துள்ள நிலையில் , அவரது துணைவியார் சந்தியா எக்னெலிகொட" கோட்டாபய ராஜபக்சவின் குற்ற இராச்சியத்தை இயக்கிய முக்கிய இயந்திரமாக சுரேஸ் சலே செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் சந்தியா எக்னெலிகொட க…
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 6000 நாட்கள கடந்துள்ள நிலையில் , அவரது துணைவியார் சந்தியா எக்னெலிகொட" கோட்டாபய ராஜபக்சவின் குற்ற இராச்சியத்தை இயக்கிய முக்கிய இயந்திரமாக சுரேஸ் சலே செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் சந்தியா எக்னெலிகொட கூறுகையில், முதலில் பிரகித் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கைத் திசை திருப்ப இராணுவ புலனாய்வுப் பிரிவினர் " தகவல்கள் இல்லை" என்றார்கள்.பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டனபிறகு, " தகவல்கள் எரிந்துவிட்டன" என்றார்கள். கடைசியாக, " தகவல்களை தந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் " என முட்டுக்கட்டை போட்டார்கள்.
வேடிக்கை என்னவென்றால் புலனாய்வாளர்கள் விடுமுறையில் சென்ற சாதாரண ஆவணங்களைக் கேட்டதற்கே " தேசிய பாதுகாப்பு" என்ற போர்வையை பயன்படுத்தினார்கள்.
சுரேஸ் சலே நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்க்கப் பல காரணங்களை கூறினார்.அவரது முகம் தெரிந்தால் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு" என விசித்திரமான வாதங்களை முன் வைத்தனர். இறுதியில், நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் மலேசியாவுக்கு தப்பிச் சென்றதாக சந்தியா குறிப்பிட்டார்.
குற்றவாளிகளைக் காப்பாற்ற அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் துணை நின்றார். " நாட்டை மீட்ட போர் வீரர்கள்" எனக் கூறி, தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளை விடுவிப்பதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.இதனால் கிடைக்க வேண்டிய பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உண்மையைச் சொல்வதற்கு பதிலாக, மேலிடத்து உத்தரவின் பெயரில் சாட்சிகளை அளிக்கும் வேலையையே இன்றுவரை செய்து வருகிறார்கள் எனவும் சந்தியா குற்றஞ்சுமத்தியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைவாக சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

