டெங்கு நோய் பரவும் அபாயம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிடையே பரஸ்பர உறவை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் குப்பைப் பிரச்சினையையும் டெங்கு அ…

டெங்கு நோய் பரவும் அபாயம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிடையே பரஸ்பர உறவை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குப்பைப் பிரச்சினையையும் டெங்கு அபாயத்தையும் கட்டுப்படுத்துவதற்காக, பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நேற்று(03.07.2026) நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள குப்பை சேகரிப்பு செயல்முறையை நெறிப்படுத்தவும், வளங்களை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்தவும் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

குப்பைகளை அகற்ற திட்டம் மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, நீண்டகால செயல்பாட்டு வெற்றியை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

தற்போதுள்ள கழிவு மேலாண்மை சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஒருங்கிணைந்த, விரைவான மற்றும் நிலையான அணுகுமுறையைக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு நகரத்தை உருவாக்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

தற்போதுள்ள கழிவு சேகரிப்பு செயல்முறையை நெறிப்படுத்தவும், வளப் பயன்பாட்டில் அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய கழிவு மேலாண்மைச் சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், அப்பிரச்சனைகளுக்கு நிரந்தரமான மற்றும் நீடித்த தீர்வை வழங்குவதற்காக எடுக்கப்படக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.