களனி - நுங்கமுகொட பகுதியில் தேரர்கள் தங்கும் மடாலயத்தின் வாசலுக்கு முன்பாக மனித தலையொன்று கொண்டுவந்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.பொலிஸ் பாதுகாப்பு குறித்த மடாலயத்தில் வசிக்கும் ஒரு பௌத்த தேரர…
களனி - நுங்கமுகொட பகுதியில் தேரர்கள் தங்கும் மடாலயத்தின் வாசலுக்கு முன்பாக மனித தலையொன்று கொண்டுவந்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.பொலிஸ் பாதுகாப்பு குறித்த மடாலயத்தில் வசிக்கும் ஒரு பௌத்த தேரரை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் நேற்று முன் தினம் (26) இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.குறித்த தேரர் 26 ஆம் திகதி அனுராதபுரத்தில் நிகழ்ச்சியொன்றிற்காக சென்று திரும்பியபோது, வாசலுக்கு முன்பாக மனித தலை இருப்பதை அவதானித்து பேலியகொட தலைமையக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, அவ்விடத்தை பாதுகாப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மனித தலையை பொலிஸ் காவலில் எடுத்த பின்னர், அந்த தேரர் மடாலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை இந்த மடாலயத்தில் முன்பு வசித்து வந்த தேரர் காலமான பிறகு, குறித்த தேரர் 2024 முதல் அங்கு பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரை விரட்டியடிக்கும் நோக்கத்துடன், அதே பகுதியில் உள்ள மற்றுமொரு தேரர் மனித தலையை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் 26 ஆம் திகதி காலையில், அந்த தேரர் முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வந்து இரகசியமாக திரும்பிச்செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் குறித்து பெலியகொட தலைமையக பொலிஸார் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

