கொழும்பிற்கான தமது விமான சேவைகளை அதிகரிக்க கட்டார் எயார்வேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2026 ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு நோக்கிய தனது விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதற்கமைய,, நாளொன்றுக்கு 5 விமானங்கள் வீதம் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.கட்டார் ஏர்…

கொழும்பிற்கான தமது விமான சேவைகளை அதிகரிக்க கட்டார் எயார்வேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2026 ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு நோக்கிய தனது விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதற்கமைய,, நாளொன்றுக்கு 5 விமானங்கள் வீதம் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.கட்டார் ஏர்வேஸ் நிறுவனம்இதன் மூலம் வாரத்திற்கு 35 விமானங்கள் பயணிக்கும் என கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கூடுதல் சேவைகள், இலங்கைக்கும் முக்கிய சர்வதேச சந்தைகளுக்கும் இடையிலான விமானப் பயண இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.