Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி அனு…

Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.இதன் பதவிக்காலம் நாளை உத்தியோகபூர்வமாக நிறைவடையவிருந்த நிலையிலேயே, ஆணைக்குழுவின் தற்காலிக பணிகளை நிறைவு செய்து அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அதன் பதவிக்காலம் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.2010 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட ஊழல், மோசடி, சொத்துக்களின் குற்றவியல் ரீதியான கையாடல், நம்பிக்கை பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை, ஏமாற்றுதல் மற்றும் அதிகாரத்தை அல்லது அரச வளங்களையும் சலுகைகளையும் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற விவகாரங்களை விசாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.