கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நாளை (04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளுடன், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோ…
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நாளை (04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளுடன், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹானை, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐ.டி.எச். (IDH), கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவலை, மஹரகம, பொரலஸ்குமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அத்துடன், தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர பகுதிகளிலும் இதே நேரப்பகுதியில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதால் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

