கொழும்பு பங்குச் சந்தை செயலற்று உள்ள கணக்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அமைய செயலற்ற கணக்குகளுக்கான படிப்படியான இடைநிறுத்தக் கட்டமைப்பை கொண்டுள்ள கணக்குதாரர்கள், புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு உட்படுத்தப்பட்டு, சொல்லப்பட்ட கணக்குக…
கொழும்பு பங்குச் சந்தை செயலற்று உள்ள கணக்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு அமைய செயலற்ற கணக்குகளுக்கான படிப்படியான இடைநிறுத்தக் கட்டமைப்பை கொண்டுள்ள கணக்குதாரர்கள், புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு உட்படுத்தப்பட்டு, சொல்லப்பட்ட கணக்குகளை எப்போது வேண்டுமானாலும் மிக எளிதாக மீண்டும் செயல்படுத்த முடியும்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய பட்டியலிடப்பட்டுள்ள விதிகளுக்கு அமைய கணக்குதாரர்களை மோசடிகளிலிருந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.நடவடிக்கை
மூன்று ஆண்டுகளாகச் செயலற்று இருக்கும் கணக்குகளை 'செயல்படாத வாடிக்கையாளர் கணக்குகள்' என வகைப்படுத்தி, கணக்குதாரர்களால் அந்த கணக்கு மீண்டும் செயல்படும்வரை, அதில் நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் அவதானிக்கப்படுவதுடன் கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்கள், தாங்கள் விரும்பு எந்த நேரத்திலும், மொபைல் செயலில் உள்ள 'செயல்படாத கணக்கை மீண்டும் செயல்படுத்துதல்' அல்லது சி.டி.எஸ். இணையத்தளம் மூலமாகவோ தங்கள் கணக்குகளை மீண்டும் செயல்படுத்தலாம் என கொழும்பு பங்குச்சந்தை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

