கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு நாளை (4) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. முல்லேரியா துணை மின்நிலையத்திற்கு அருகில்…
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு நாளை (4) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
முல்லேரியா துணை மின்நிலையத்திற்கு அருகில் மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. மேலும், தெஹிவளை நீர் இறைக்கும் நிலையம் மற்றும் மாளிகாவத்தை ‘எலி ஹவுஸ்’ (Eli House) நீர் இறைக்கும் நிலையம் ஆகியவற்றின் மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்:
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள்
பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல
கொலன்னாவ, ஐ.டி.எச் (IDH), கொட்டிக்காவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒறுகொடவத்தை
கடுவெல, மஹரகம, பொரளச்கமுவ மற்றும் பிலியந்தலை
மேற்படி காலப்பகுதிக்குத் தேவையான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

