அநுராதபுரம் - மதவாச்சி, பிஹிம்பியகொல்லேவ பொலிஸ் பிரிவின் சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சியம்பலாகஸ்வெவ, கேந்தேவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய, ஓய்வுபெற்ற கடற்படை வீரர் என தெரியவந்து…
அநுராதபுரம் - மதவாச்சி, பிஹிம்பியகொல்லேவ பொலிஸ் பிரிவின் சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சியம்பலாகஸ்வெவ, கேந்தேவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய, ஓய்வுபெற்ற கடற்படை வீரர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு, குளத்துக்கு குளிக்கச் சென்ற வேளையில் யானையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பிஹிம்பியகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.

